எமது உற்பத்திகள் | The Family Planning Association of Sri Lanka
ரூ 230.00

இது வாய்மூலம் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரை (OCP). இதில் பெண்களின் ஹோர்மோன்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஒஸ்ட்ரோஜன் மற்றும் புரெரஜெஸ்டின் குறைந்த அளவை எத்திநெல் எஸ்ட்ராடியல் மற்றும் லெவனே ஜெஸ்ரல் என்பவை உள்ளடங்கியுள்ளன. கர்ப்பத்தை தடுப்பதற்கு தினசரி உட்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக ஒழுங்காக உட்கொள்ளுவது 99.9% வெற்றியளிக்கும். ஜேர்மனியின் பேயர் ஸ்கெரிங் பார்மா (Bayer Schering Pharma) கம்பனியால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இலங்கைப் பெண்மணி 50 வருடங்களுக்கு மேலாக உபயோகிக்கப்பட்டுள்ளது. மாத்திரை உட்கொள்ளுவதை நிறுத்தினால் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படாது.

ரூ 295.00

அவசர கருத்தடை மாத்திரை (உடலுறவின் பின் காலையில் எடுக்கும் மாத்திரை) இது பாதுகாப்பற்ற உடலுறவு நிகழ்ந்து 72 மணித்தியாலங்களுக்குள் உட்கொள்ளப்பட வேண்டும். ஒழுங்காக எடுக்கும் கருத்தடை மாத்திரையை எடுக்கத் தவறும்போது அல்லது பிழையாக எடுத்துவிடடால் பாலியல் வல்லுறவு, முறையில்லார் புணர்ச்சியின் பின்னர் இதை எடுக்க முடியும். நீங்கள் இரண்டு மாத்திரைகளையும் ஒன்றாக எடுக்க முடியும். அல்லது ஒன்றை முதலில் எடுத்து மற்றதை 12 மணித்தியாலங்களின் பின்னர் எடுக்க முடியும். அதன் வினைத்திறன் எடுக்கும் நேரத்தைப்பொருத்து தங்கியிருக்கிறது. தாமதமின்றி எடுத்தால் அதன் பெறுபேறு நிச்சயமாக அதிகமாக இருக்கும். கருச்சிதைவு ஏற்படாது. இதை ஒழுங்காக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரையை உட்கொள்ளும் முறையில் பயன்படுத்தக்கூடாது.

ரூ 400.00

பொஸ்டினர் 1 (உடலுறவின் பின்னர் காலையில் எடுக்கும் மாத்திரை) இது ஒரு முறை எடுக்கும் கருத்தடை மாத்திரையாகும். இதுவும் பாதுகாப்பற்ற உடலுறவு நிகழ்ந்து 72 மணித்தியாலங்களுக்குள் உட்கொள்ளப்பட வேண்டும். தாமதமின்றி எடுத்தால் அதன் பெறுபேறு நிச்சயமாக அதிகமாக இருக்கும். கருச்சிதைவு ஏற்படாது. இதை ஒழுங்காக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரையை உட்கொள்ளும் முறையில் பயன்படுத்தக்கூடாது.

ரூ 100.00

இது இயற்கையான மரப்பால் இரப்பரினால் தயாரிக்கப்பட்டுள்ள ஆணுறையாகும். பிரீதியை கர்ப்பமடைவதைத் தடுப்பதற்கும் பாலுறவால் தொற்றும் நோய்களைத் தடுப்பதற்கும் பயன்படுத்த முடியும்.

ரூ 150.00

குமிழ் ஆணுறை இயற்கையான மரப்பால் இரப்பரினால் தயாரிக்கப்பட்டுள்ள ஆணுறையாகும். இது சரியான இடத்தில் உயர்த்தப்பட்ட 100 இரப்பர் 'குமிழ்'களைக் கொண்டுள்ளதோடு கடுமையான உராய்வு உணர்ச்சியைக் கொண்டுள்ளது. இருவருக்கும் ஒரே நேரத்தில் திருப்தியையும் கிளர்ச்சியையும் ஊட்டக்கூடியது.

ரூ 200.00

இந்த ஆணுறையின் உட்புறம் பென்சோகெய்ன் பூசப்பட்டுள்ளது. இதனால் உச்சத்தை அடைவதைத் தாமதப்படுத்தி நீண்ட நேரம் உறவுகொள்ளும் இன்பத்தைத் தருகிறது. பென்சோகெய்ன் விரைவில் விந்து வெளியேறுவதைத் தடுத்து நிண்ட நேரம் உறவுகொள்ளும் ஆற்றலை அதிகரிக்கிறது.

ரூ 200.00

ரப் ரைடர் ஆணுறை இது சரியான இடத்தில் உயர்த்தப்பட்ட நூறு இரப்பர் குமிழ்களைக் கொண்டுள்ளதோடு திருப்தியையும் கிளர்ச்சியையும் ஊட்டக்கூடியது.

ரூ 250.00

மேலதிக இன்பத்திற்கும் சந்தோசத்திற்கும் மேலதிக நிறத்தையும் காம ஆசையையும் ஏற்படுத்தும் வாசைனயும் கலந்து ஆசையூட்டுகிறது. ஸ்ரொபெரி, ரஸ்பெரி, புளுபெரி சுவையும் வாசனையும் உங்கள் இருவருக்கும் கிளுகிளுப்பூட்டுகிறது. உங்களுடைய பாலியல் வாழ்க்கையைப் பாதுகாப்பாக அனுபவிப்பதற்கு ஆணுறை (கொண்டொம்) மிகவும் பாதுகாப்பானதாகும்.

ரூ 680.00

This is the latest in condom technology for a truly intimate sexual experience. Our SKYNFEEL material is soft and comfortable, for the most natural fit and feel. This is the closest thing to wearing nothing

ரூ 300.00

Stamina Plus for longer lasting pleasure condom in a natural rubber latex, 4.5% benzocaine lubricated male dotted condom with reservoir end that helps delay the climax and prolong sexual excitement for longer-lasting lovemaking. Benzocaine also helps prevent premature ejaculation and provides greater staying power.

ரூ 150.00

ஊதா மென்மையுடைய மிருதுவான மேற்பரப்பைக் கொண்ட ஆணுறை நன்றாகப்பொருந்தி நன்றாக உணர்ச்சியளிக்கிறது. இது உறவில் அதிக ஆர்வத்துடன் உணர்ச்சியூட்டக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் வலுவானது. உணர்ச்சியூட்டக்கூடியது. ஒவ்வொரு ஆணுறையும் இயற்கையான உணர்ச்சியை ஊட்டக்கூடிய வகையில் உராய்வு நீக்கி பூசப்பட்டுள்ளது. இது எவ்வளவு மெல்லியது என்றால் ஒன்றும் அணியாமல் இருப்பதைப்போலிருக்கும்.

ரூ 494.00

டெபோ - புரவேரா டெபோ மெட்ரொக்ஸி புரஜெஸ்டரோன் எசிடேட் (DMPA) டின் ஒரு வியாபார சின்னமாகும். இது பெண்களுக்கு செலுத்தும் ஊசி மருந்தாகும். இதில் ஹோர்மோன் புரஜஸ்டின் அடங்கியுள்ளது. இது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏற்றப்படுகின்றது. இது மிகச்சிறந்த கருத்தடை முறையாகும்.

Depo-Provera Injection - First visit - Rs. 1000.00
Depo-Provera Revisit - Rs. 750.00

To make an appointment, please call: 077 955 2979

ரூ. 5000.00

இது தோலுக்கு அடியில் புகுத்தும் ஒரு கருத்தடை முறையாகும். இது நீண்டகால பலன் தரக்கூடியது. ஐந்து வருடங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும். கர்ப்பமடைய விரும்பினால் ஐந்து வருடங்கள் முடிவடைவதற்கு முன்னர் எந்த நேரமும் அகற்றிவிட முடியும். 99% க்கு மேல் பலன் தரக்கூடியது. அதை அகற்றியவுடன் கர்ப்பமடையக்கூடிய சாத்தியம் இருப்பது சிறப்பம்சமாகும். 

Jadelle Insertion Fee - Rs 7500.00
Jadelle Removal Fee - Rs. 1500.00
Jadelle Insertion Follow Up Fee - Rs 500.00

To make an appointment, please call: 077 955 2979

ரூ. 775.00

கொப்பர் T என்பது T வடிவத்திலான ஒரு சிறிய உபகரணம். இது பெண்ணுறுப்புக்குள் பொருத்துகிற (IUD) உபகரணமாகும். வளையக்கூடிய பிளாஸ்ரிக்கினால் உருவாக்கப்பட்டு செம்பினால் சுற்றப்பட்டு பயிற்சிபெற்ற மருத்துவ உத்தியோகத்தரால்  கர்ப்பப்பை வாசலில் பொருத்தப்படுகிறது.  இது ஹோர்மோன் அற்றது. அதனால் பெண்ணின் இயற்கையான மாதவிடாய் சுழற்சியில் மாற்ற்தை ஏற்படுத்தாது. (IUD) குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு இருக்கும். இது மிகச் சிறந்த கருத்தடை உபகரணமாகும். இதை அகற்றியவுடன் கருத்தறிக்க முடிவது இதில் உள்ள சிறப்பம்சமாகும்.

IUD Insertion Fee -  Rs 2500.00
IUD Removal Fee - Rs 1000.00
IUD Insertion Follow Up Fee - Rs 500.00

To make an appointment, please call: 077 955 2979

ரூ 120.00

நீரில் கரைக்கும் எரிவு இல்லாத மற்றும் கறைபடியாத உராய்வு நீக்கி. இது பெண்ணுறுப்பை ஈரப்படுத்துவதன் மூலம் உடலுறவின்போது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நீண்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது.

ரூ 120.00

இதில் விந்தணுக்கொல்லி சேர்க்கப்படவில்லை. இது ஒரு கருத்தடை மாத்திரை அல்ல. 

பென்சொகேன் ஜெல் என்பது விந்து வெளியேறுவதை தாமதப்படுத்துகின்ற, எண்ணெய் இல்லாத மற்றும் நீரில் கரையக்கூடிய உயவுப்பொருள் ஆகும். இதை கண்கள் அல்லது காதுகளில் பயன்படுத்த வேண்டாம். நேரடியான சூரியஒளி படாத குளிர்ச்சியான உலர்ந்த இடத்தில் வைக்கவும்.

உங்களுடைய விரல்களில் தேவையான அளவு லூப்ரிகேட்டிங்/ உயவுப்பொருள் ஜெலியை எடுத்து, அதை நேரடியாக தோலில் அல்லது விரும்பிய பகுதிகளில் தடவவும்.

எச்சரிக்கை:

  • வெளிப்புற பாவனைக்கு மட்டுமே. உள்ளூர மயக்கப்பண்புகள் இருக்கின்றன.
  • நீங்கள் ஒரு ஆணுறையை பயன்படுத்துகின்ற நபரெனில், ஆணுறையை அணிவதற்கு முன்பு விறைக்காத ஆண்குறியின் மீது தடவவும்.
  • ப்ரோசகேன், பியூட்டகேன், பென்சொகேன் அல்லது பிற "கேன்" வகை மயக்கமருந்துகள் போன்ற வெளிப்பாவனை மயக்கமருந்துகளால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் பயன்படுத்த வேண்டாம்.
  • உங்களுக்கோ அல்லது உங்களுடைய துணைவருக்கோ எரிகின்ற உணர்வு அல்லது அரிப்பு ஏற்படுமானால், உடனடியாக அதை பயன்படுத்துவதை நிறுத்தவும். இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் ஒரு மருத்துவரை அணுகவும்.
  • இந்த தயாரிப்பை பயன்படுத்துகின்ற பொழுது, எந்தவொரு துணைவருக்கும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது அவர்களுடைய பிறப்புறுப்பு உதடுகள்/ யோனி மடல்கள் நீலமாக மாறினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளவும். தயாரிப்பை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
  • விரைவான விந்து வெளியேற்றம் ஒரு மருத்துவ பரிசோதனை தேவைப்படுகின்ற ஒரு நிலைமையாக இருக்கலாம். அறிவுறுத்தல்களின் படி இந்த தயாரிப்பை பயன்படுத்துவதால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், அதை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகவும். உடலுறவுக்கு பின்பு எண்ணெயை/ உயவுப்பொருளை கழுவிவிடவும்.
  • கண்கள், தோல் அல்லது ஆடைகளுடன் தொடர்பை தவிர்க்கவும். விறைத்த பின்பு நன்கு கழுவவும்.
  • விழுங்கினாலோ அல்லது உள்ளிழுத்தாலோ தீங்கு விளைவிக்கும். தோல், கண்கள் மற்றும் மூச்சுக்குழாயில் ஒவ்வாமை ஏற்படலாம். 

சேமிப்பு: சூரியஒளி படாத குளிர்ச்சியான, உலர்ந்த, நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமிக்கவும்.

உள்ளடங்குவன: பாலிஎதிலீன், கிளைகோல், 5% பென்சொகேன்.

      


Pap Smear Test - Rs 2500.00

Breast Examination - Rs. 300.00

Gynaecological consultation Fee - Rs 500.00

Premarital Counselling Session - Rs 1000.00

To make an appointment, please call: 077 955 2979

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By