இனி உடலுறவு அத்தனை சுவாரஸ்யமற்றதா? | The Family Planning Association of Sri Lanka

இனி உடலுறவு அத்தனை சுவாரஸ்யமற்றதா?

பாலியல் செயல்பாடுகளில் ஆர்வமின்மை குறைந்த பாலுணர்வு உந்தல் அல்லது லிபிடோ(பாலுணர்வு உந்தல்) இழப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அனுபவிக்கும் பொதுவான பிரச்சனையாகும், இது அவர்களின் வாழ்க்கையில் எந்த கட்டத்திலும் நிகழலாம், மேலும் இது ஏன் நிகழ்கிறது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

 

இதற்கான அறிகுறிகளில் பாலியல் தூண்டுதல், உணர்வுகள், பாலியல் எண்ணங்கள் மற்றும் உடலுறவு கொள்ளவதற்கான ஆசை போன்றவற்றில் ஆர்வமின்மை போன்றவை அடங்கலாம். இது படிப்படியாக அல்லது திடீரென நிகழலாம். இது ஒரு குறுகிய கால கவலையாகவோ அல்லது நீண்ட கால பிரச்சினையாகவோ இருக்கலாம். ஆண்களில் விறைப்புத்தன்மை குறைபாடு அல்லது பெண்களில்  யோனி இறுக்கம்/அல்குல் தசைச்சுருக்கம் மற்றும்  வலிமிகுந்த உடலுறவு போன்ற பிற பாலியல் பிரச்சனைகளை அனுபவிக்கும் நபர்களும் பாலியல் ஆர்வமின்மையைக் கொண்டிருக்கலாம்.

 

பாலுணர்வு உந்தல் குறைவின் பொதுவான காரணங்கள் இதில் உள்ளடங்கும். இவற்றைத் தாண்டி மேலும் பல காரணங்கள் உள்ளன. அவையாவன:

 

  • கர்ப்பம்
  • பிரசவத்திற்குப் பின் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் காலம்
  • மாதவிடாய் நிறுத்தம்
  • ஏற்கனவே இருக்கும் மன அழுத்தம் அல்லது வாழ்க்கையை மாற்றிய  நிகழ்வின் தாக்கம் அல்லது எரிச்சல், பதட்டம், மனச்சோர்வு போன்ற மனநிலை.
  • நீரிழிவு, தைரொயிட்  அல்லது புற்றுநோய் போன்று ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைமைகள்
  • விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் தசை சுரிப்பு (தசை வலிகள்) (vaginismus) போன்ற பாலியல் செயலிழப்பு
  • இறுக்கமான உறவு 
  • அதிகப்படியான மது அருந்துதல் அல்லது போதைப் பொருட்கள்போதைப் /மருந்துகளை தவறாகப் பயன்படுத்துதல் 
  • மருந்துகள் -  மன அழுத்த தடுப்பு மருந்து அல்லது உயர் இரத்த அழுத்ததிற்கான மருந்து
  • சில ஹோர்மோன் கருத்தடைகளும் பாலுணர்வு உந்தலை பாதிக்கலாம்

 

சிகிச்சை முறைகள் 

 

உளவியல் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் உட்பட பாலியல் ஆர்வமின்மைக்கு பல சிகிச்சை முறைகள் உள்ளன. குறைந்த பாலியல் உணர்ச்சிக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சையைத் தொடங்க, மருத்துவரை அணுகுவது முக்கியம்.

 

சீரான உணவு உட்கொள்வதை உறுதி செய்வது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும், அதன் மூலம் பாலியல் ஆசையை மேம்படுத்தலாம்.

 

உளவியல் சிகிச்சைகளில் ஆலோசனை(counselling) மற்றும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை ஆகியவை அடங்கும். இது ஒரு நபரின் எண்ணங்களை மீண்டும் ஒருமுகப்படுத்துவதோடு மனநலப் பிரச்சினைகளை சமாளிக்கும் வழிமுறைகளை உருவாக்க உதவுகிறது. உறவுச் சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்கள் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். உறவுச் சிக்கல்கள், பாலியல் ஆசை/ எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை ஊக்குவிக்க உறவு நெருக்கத்திற்கு முன்னுரிமை அளித்தால், செக்ஸ் தெரபி பயனுள்ளதாக இருக்கும்.

 

நீரிழிவு போன்ற அடிப்படை மருத்துவ நிலைமைகள் மற்றும் விறைப்புத்தன்மை செயலிழப்பு போன்ற பாலியல் சுகாதார நிலைமைகளை மருத்துவ சிகிச்சையுடன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, பாலியல் செயல்பாடுகளில் ஆர்வத்தை மேம்படுத்த உதவும்.  மன அழுத்தத்திற்கான எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பதட்டத்திற்கான எதிர்ப்பு மருந்துகள் உளவியல் நிலைமைகளை மேம்படுத்தும்.

 

சில மருந்துகள் அல்லது கருத்தடைகளை மாற்றுவதும் பாலியல் உணர்ச்சியை மேம்படுத்த உதவும். மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைதல் அல்லது வயதான ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மாறுதல் போன்ற ஹோர்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஹோர்மோன் குறைநிரப்பிகள் மூலம் மேம்படுத்தலாம். 

 

பாலுணர்வு உந்தல் குறைவு பல நபர்களுக்குமுள்ள மிகவும் பொதுவானதொன்றாகும். மேலும் இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஒவ்வொருவரின் பாலுணர்வு உந்தலும் (செக்ஸ் டிரைவ்) எப்போதும் ஒரே நிலையில் இருக்காது; மாறாக அவர்களின் வாழ்நாளில் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

 

எழுத்தாக்கம் 

ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கம் 

 

Author

The Family Planning Association of Sri Lanka

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By